--- --:--:-- --

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18ஆம் தேதி போராட்டம்..!

1

ருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாடு முழுவதும் கொரொனா பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள் ஈடுபடுள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில் மருத்துவர்கள் மீது தேவையற்ற தாக்குதல் நடத்தப்படுவதாக இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

அசாம், பீகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களில் மருத்துவர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் மருத்துவமனைகளில் பாதுகாக்க மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

எனவே மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon