--- --:--:-- --

புகை பிடிப்பவர்களுக்கு கொரொனா ஏற்பட்டால் இதயநோய் வர வாய்ப்பு..!

8

புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால் புற்றுநோய் இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

புகையிலை தடுப்பு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அனைத்து நாடுகளும் தங்கள் மக்களை புகைப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

 

கொரொனா வைரஸ் பாதிப்பு நேரடியாக நுரையீரலுடன் தொடர்புடையது என்பதால் புகை பழக்கம் கொண்டவர்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக புற்றுநோய், இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon