புதுச்சேரியில் கொரொனா தொற்றுக்கு மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு..!
புதுச்சேரியை பொருத்தவரை நாளுக்கு நாள் கொரொனா அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக ஆயிரத்துக்கும் குறைவாக கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். புதுச்சேரியில் கொரொனா தொற்றின் காரணமாக இதுவரை 8 சுகாதார ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு ஜிப்மரில் செவிலியர் ஒருவர் கொரொனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை சுகாதாரப் பணியாளர்கள் 5 பேரும். 3 செவிலியர்கள் என இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் வயதான செவிலியர் உயிரிழந்துள்ளார்






