பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கப்படும்..!
கொரொனாவால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுவது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொரொனாவால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிர்க்கும் குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் குழந்தைகளின் பதினெட்டாவது வயதில் அந்த தொகையை வட்டியோடு அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு நிலங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் குழந்தைகள் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இரவு நேர மற்றும் பாதுகாவலரின் ஆதரவை வளரும் குழந்தைகளுக்கு அவர்களது 18 வயது வரை மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டபடிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஒற்றை பெற்றோருக்கு உடனடியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.






