நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் நிதியுதவி..!
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். கொரொனா ஊரடங்கு காரணமாக திரைத்துறையை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாயும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஐம்பதாயிரம் ரூபாயும், நடிகை லதா இருபத்தைந்தாயிரம் ரூபாயும், நடிகர் விக்னேஷ் பத்தாயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கி உள்ளனர். அவர்கள் வழங்கிய பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






