--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மனைவி..! கொரொனா நெகட்டிவ் என குறுஞ்செய்தி..!

1

கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரொனா நெகட்டிவ் வந்த குறுந்தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன்.

 

இவருடைய மனைவி கொரொனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் கணவரின் செல்போனுக்கு கொரொனா தொற்று இல்லை என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து பரமேஸ்வரன் சென்னை மாநகராட்சியில் தொடர்பு கொண்ட போது தவறுதலாக குறுஞ்செய்தி வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

இதனால் தன் மனைவி கொரோனாவால் உயிரிழந்தாரா என்று சந்தேகம் அடைந்திருப்பதாகவும் மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon