--- --:--:-- --

ருத்ராபிஷேகம் பூஜையில் ஈடுபட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்..!

6

த்திரபிரதேசத்தில் கொரொனாவை குறைப்பதற்காக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ருத்ராபிஷேகம் பூஜையில் ஈடுபட்டார். கொரொனா இரண்டாவது அலையில் மிகவும் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று.

 

காசியாபாத், லக்னோ உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் இருந்த கொரொனா நோயாளிகளின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்ய வசதியின்றி சாலைகளிலும் பொதுவெளிகளில் உடல்களை எரிக்கும் அவலம் நடந்து வருகிறது .

 

இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு நடத்தி அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிவலிங்கத்திற்கு ஒரு மணி நேரமாக ருத்ராபிஷேகம் பூஜை எனப்படும் சிவலிங்கத்திற்கு பால் ஊற்றி வழங்கும் சிறப்பு பூஜை மேற்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon