--- --:--:-- --

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை..!

5

ன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வு குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடன் வானொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

 

இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை செயலாளர் அபூர்வா பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon