--- --:--:-- --

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!

6

வெப்பச்சலனம் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் 13ஆம் தேதிமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென் தமிழக மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் தான் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் காரணமாக இயல்பு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon