பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக இன்று ஆலோசனை..!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரொனா பரவல் காரணமாக பத்து பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சென்னையில் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.






