தமிழகத்தில் இன்று முழுவதும் முழு முடக்கம் அமல்..!
தமிழகத்தில் இன்று முழுவதும் முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் எவையெல்லாம் அனுமதிக்கப்படுகின்றன? தமிழகத்தில் இன்று காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படும். இறைச்சி, மீன் கடைகளுக்கும் அனுமதி இல்லை. வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும்.
அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை பிரயோகத்திற்கு அனுமதி அளிக்கப்படும். விரைவில் விமான சேவையும் திட்டமிட்டபடி இயங்கும்.
விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும் எனினும் குறிப்பிட்ட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களுக்காக பேருந்துகளும் புறநகர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் திறப்பதற்கும் அனுமதியுண்டு. ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
காலை 4 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கும் எனினும் பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும். திருமண நிகழ்ச்சியில் 100 பேர் வரையிலும், துக்க நிகழ்ச்சியில் 50 பேர் வரையிலும் பங்கேற்கலாம். அதை கலந்து கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை.






