--- --:--:-- --

தமிழகத்தில் இன்று கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு..!

7

மிழகத்தில் அதிகரித்து வரும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் மோடியுடன் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

 

இந்த ஆலோசனையில் தமிழகம் சார்பில் பங்கேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

 

சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் கொரொனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது ஆக்சிஜன் விநியோகத்தை கூட்டுவது தேவையான இடங்களில் சுகாதாரப் பணியாளர்களை பணி அமர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அதுகுறித்து இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon