--- --:--:-- --

தங்கையின் ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்ததாக புகார் அளித்துள்ள சின்னத்திரை நடிகை..!

10

ங்கையின் ஆடைகளை கலைந்து மானபங்கம் செய்தவர்களின் மீதான புகாரை திரும்பப் பெற காவல் ஆய்வாளர் மிரட்டுவதாக சின்னத்திரை நடிகை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

சென்னை மணலியை சேர்ந்த ஜெனிஃபர் செம்பருத்தி வானத்தைப்போல ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் இவர் உதவி இயக்குனர் நவீன் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தார்.

 

ஆனால் நவீன்குமார் பணம் கேட்டு மிரட்டியதாக கூறி அவரிடம் இருந்து ப பிரிந்துள்ளார். ஞாயிறு அன்று நவீன் குமாரும் அவரது தந்தை உள்ளிட்ட சிலரும் தனது காரின் கண்ணாடியை உடைத்து தனது தங்கையையும் தன் தந்தையையும் தாக்கியதாக காவல் நிலையத்தில் ஜெனிபர் புகார் அளித்துள்ளார்.

 

தனது தங்கையின் ஆடையை கிழித்து நவீன்குமார் மானபங்கபடுத்தியதாகவும் புகாரில் கூறியுள்ளார். அதன்படி 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. ஆனால் புகாரை திரும்பப் பெறுமாறு காவல் ஆய்வாளர் சிட்டிபாபு மிரட்டுவதாக சென்னை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon