--- --:--:-- --

16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

8

காராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரையிலான பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon