--- --:--:-- --

சின்னக் கலைவாணர், நடிகர் விவேக் காலமானார்!

1

டிகர் விவேக் இன்று காலை 4.35 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 59. அவரது உடல் சென்னை விருகம் பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல்  மாலை 5 மணிக்கு மேட்டூக்குப்பம் மின்மயானத்தில் எரிக்கப்பட உள்ளது.

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீர் நெஞ்சுவலி வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரது மனைவியும் மகளும் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மனுவில் நடிகர் காலமானார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு பிறந்த நடிகர் விவேக் 1986 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை தலைமைச்செயலக ஊழியராக பணி புரிந்தார்.

 

பின்னர் திரை மீது  கொண்ட ஆர்வத்தால் இயக்குனர் கே பாலச்சந்தரின் இயக்கிய படத்தில் அறிமுகமானார். அதன்பின் நகைச்சுவை காட்சிகளை வெளிப்படுத்தி மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

 

தூள், ரன், அந்நியன், சிவாஜி, வேலையில்லா பட்டதாரி போன்ற 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நான் தான் பாலா, வெள்ளை கொக்கு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவரது சேவையைப் பாராட்டி 2009ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

 

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை ஐந்து முறை அவர் பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட அன்பு காரணமாக தமிழகத்தின் மீது ஒரு கோடி மரங்களை முயற்சியில் ஈடுபட்டார். டெங்கு விழிப்புணர்வு, கொரொனா தடுப்பூசி உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களுக்கு சமூக அக்கறையுடன் நடிகர் விவேக் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

 

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் விவேக் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினரும் பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடிகர் விவேக் போட்டுக்கொண்ட தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் எந்த காரணமும் இல்லை என்றும் இல்லை என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon