--- --:--:-- --

நீதிபதி முன்பு கழுத்தை அறுத்து கொண்ட ஆயுள் தண்டனை கைதி..!

7

சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வியாசர்பாடியை சேர்ந்த பாண்டி என்பவர் விசாரணைக்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

விசாரணையின் போது மறைத்து வைத்திருந்த பிளேடால் திடீரென கழுத்தை அறுத்துக் கொண்ட அவரை காவல்துறையினர் தடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு கழுத்தில் 14 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

 

சிறையில் செய்யும் பணிக்காக பாண்டியனுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதியை அதிகாரிகள் பறித்து கொள்வதாகவும் அது தொடர்பாக புகார் அளித்தால் சிறைத்துறையினர் தாக்கி கொடுமை படுத்துவதாகவும் கூறி நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயன்றதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon