--- --:--:-- --

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது..!

6

8 அணிகள் பங்கேற்கும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன. கொரொனா காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர் நடப்பாண்டில் உள்நாட்டில் நடத்தப்படுகிறது.

 

சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் ஆகிய ஆறு மைதானத்தில் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடமும் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

அதன்படி சென்னையில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் பலம் பொருந்திய அணிகள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon