பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!!
கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.
புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலிகள் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தினர்.
தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான வழிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் ஒன்று என்று பிரதமர் மோடி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




