--- --:--:-- --

அசாமில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு..!

7

சாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தில் லிப்ட் கேட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

 

நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அசாமின் பிரதவாரி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் 149இல் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்துச் செல்ல பாஜக வேட்பாளரின் காரை தேர்தல் அதிகாரி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

வாக்கு இயந்திரம் பாஜக வேட்பாளரின் காரில் எடுத்துச் செல்லப்பட்ட தகவலறிந்த எதிர்கட்சிகள் காரை முற்றுகையிட்டனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

 

இதற்கிடையே வாக்கு இயந்திரத்துடன் பாஜக வேட்பாளரின் காரில் சென்று தேர்தல் அதிகாரி நான்கு பேர் பணிஇடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மேலும் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாஜக வேட்பாளரின் வாகனத்தில் லிப்ட் கேட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon