இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு இரவு ஊரடங்கு..!
கொரொனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து புனேவில் உள்ள உணவகங்கள், திரையரங்குகள், வாரச் சந்தைகள் வழிபாட்டுத்தலங்கள் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மாநகரப் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் 12 மணிவரை இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது.
50 பேர்களுடன் திருமணம் 20 பெயர்களுடன் இறுதிசடங்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களும் ஒரு வார காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அடுத்த 100 நாட்களுக்குள் தடுப்பூசி போடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.






