மேற்கு வங்கத்தில் பாஜக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும்..!
மேற்கு வங்கம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அலை வீசுவதாகவும் தங்கள் கட்சி நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் நடக்கும் ஜாய்நகர்ப்பகுதியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.
மேற்குவங்கத்தில் தோல்வி உறுதி என உணர்ந்துவிட்ட நிலையில் சில எதிர் கட்சிகளின் தலைவர்களையும் துணைக்கு மம்தா அழைப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்று திரள வேண்டுமென மம்தா கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலில் தான் சென்றதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய போது அதைப்பற்றி திரிணாமுல் கட்சியினர் விமர்சிப்பதாக தெரிவித்தார்.






