--- --:--:-- --

குஷ்புவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் சுந்தர்.சி..!

10

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக அவரது கணவரும் நடிகருமான சுந்தர் சி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து அங்குள்ள பெண்களிடம் சிரித்துப் பேசிய கலகலப்பை ஊட்டினார்.

 

தமிழகத்தில் தேர்தல்களம் சூடுபிடித்து வரும் சூழலில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அதிக முறை வென்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடுகிறது.

 

அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் இறுதி தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. பாஜக தலைமைதொகுதி வேட்பாளராக தன்னை அறிவித்த நாளிலிருந்து நாள் தோறும் அங்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து தனது அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

 

இத்தனை நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் குஷ்பு மட்டுமே வாக்கு சேகரித்து வந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அவரது கணவர் சுந்தர் சி களத்தில் குதித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon