வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் தனுஷ்..!
ஒரு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுவதே கனவு என்கிற நிலையில் இரண்டாவது முறைதான் தேசிய விருதைப் பெற்று இருப்பது ஆசிர்வாதம் தான் என்றும் தங்களுக்கு வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது தாயார், தந்தை, அண்ணன் செல்வராகவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ் அந்தப்படத்தில் கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறனுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராஅலுவலகத்தில் வெற்றி மாறனை முதன் முறையாக சந்தித்த போது அவர் தனது நண்பனாக துணைவனாக சகோதரனாக இருப்பார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என தனுஷ் குறிப்பிட்டார்.






