மம்தா பானர்ஜி தான் தோல்வி அடையப் போவதை உணர்ந்து விட்டார் : மோடி
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் தோல்வி அடையப் போவதை உணர்ந்து விட்டார் என்றும் எனவேதான் வாக்கு இயந்திரங்களை அவர் குறை கூறத் தொடங்கி விட்டார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் பாங்குரா என்ற ஊரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மேற்கு வங்காளம் இனிதான் உண்மையான மாற்றம் காண போவதாகவும் ஊழல் ஆட்சி முடிவுக்கு வரப் போவதாகவும் குற்றம்சாட்டினார்.
தேர்தலில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு முறைகேடு நடக்க போவதாக கூறுவதாகவும் இந்த இயந்திரங்கள் தான் 10 ஆண்டுகளுக்கு முன் தன்னை ஆட்சியில் அமர்த்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மம்தா என்னை தாக்குவதை தவிர மேற்கு வங்க மக்களின் கனவுகளை சிதைத்து மதிக்க மாட்டேன் எனவும் பிரதமர் கூறினார்.






