--- --:--:-- --

பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வேலைகள் தமிழகத்தில் எடுபடாது..!

3

பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வேலைகள் தமிழகத்தில் எடுபடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அம்பத்தூர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கிரிமினல் ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்.

 

இங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறினார். தமிழகத்தில் அதிமுகவில் ஒரு எம்எல்ஏ வெற்றி பெற்றால் அவர் பாஜக சட்டமன்ற உறுப்பினராகவே கருத வேண்டும் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon