மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்புள்ளதாக முதல்வர் தகவல்..!
மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்து திரையரங்குகள், உணவகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரொனாவால் பாதிக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.
வேறு வழியில்லாமல் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் பரவியபோது கையில் மருந்து ஏதும் இல்லாமல் இருந்தது தற்போது தடுப்பூசி வந்து விட்டதால் பொதுமக்கள் தயங்காமல் தடுப்பூசி போட முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






