--- --:--:-- --

நெரிசலை கட்டுப்படுத்த நடைமேடை சீட்டு கட்டணத்தின் விலை உயர்வு..!

3

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ஆறு ரயில் நிலையங்களில் இதுவரை 10 ரூபாயாக இருந்த நடைமேடை சீட்டு கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி நெரிசலை தடுக்க நடைமேடை சீட்டு வழங்கப்படவில்லை.

 

பயணசீட்டு வைத்திருப்போர் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் ஏறவும் இறங்கவும் பிறரின் உதவி தேவைப்படும் என்பதால் நடைமேடை சீட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

 

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் சென்னை சென்ட்ரல் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ,அரக்கோணம், காட்பாடி ஆகிய ஆறு பெரிய நிலையங்களில் மட்டும் நடை மேடை சீட்டு இன்று முதல் வழங்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon