--- --:--:-- --

முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை விஜய் பேசுவதில்லை – ஜெயக்குமார்

6

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுவாகவே வழக்கமான ஸ்கிரிப்ட் தான், புதுவிதமான ஸ்கிரிப்ட் கிடையாது. ஒரு முதலமைச்சர் என்றால் டிப்ளமேட்டிக் இருக்க வேண்டும். அந்த டிப்ளமேட்டிக் தன்மை இல்லாமல் ஒரு சினிமா போன்று ஸ்டார்ட் என்றதும் வசனத்தை முதல்வர் விஜய் ஒப்பித்துவிட்டார்.

 

 

இடைத்தேர்தலை மனதில் கொண்டு விஜய் பயணம் அமைந்தது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்று த.வெ.க கூறியது. இதுவரை வேலை தரவில்லை. அரசு பள்ளிகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதற்கு என்ன செய்யலாம் என்று கரூரில் விஜய் பேசி இருக்கலாம் அதை பேசவில்லை என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon