இந்தியாவில் மேலும் 10 கோடி கொரொனா தடுப்பு மருந்துக்கு ஆர்டர்..!
பூனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்திலிருந்து மேலும் 10 கோடி கொரொனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் கொரொனா தடுப்பு மருந்துகளை அரசு கொள்முதல் செய்து தடுப்பூசி இயக்கத்தை நடத்தி வருகிறது. நேற்றுவரை மூன்றரை கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 10 கோடி கொரொனா தடுப்பு மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒருமுறை செலுத்தப்பட்ட மருந்து 157 ரூபாய் 50 காசுகள் என விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






