--- --:--:-- --

விஜயகாந்தை சந்திக்கிறார் டிடிவி! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?

ammk dmdk

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாளை விஜயகாந்தை சந்திக்கிறார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 2ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக – திமுக கூட்டணிகளுடன் டிடிவி தினகரன், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அணிகளும் களத்தில் இறங்கியுள்ளன.

 

இதில் டிடிவி தினகரனின் அமமுகவுடன், விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும் மற்ற 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

 

அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் பிரிந்து வந்த தேமுதிகவுக்கு 60 இடங்களை அமமுக ஒதுக்கி இருக்கிறது. அதன்படி, 2011ஆம் ஆண்டு தேமுதிக வென்ற 29 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தேமுதிக மீண்டும் போட்டியிடுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்தை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசுகிறார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை நாளை (17.03.2021) காலை 11 மணியளவில் இருவரின் சந்திப்பு நடைபெறுகிறது. கூட்டணி அமைத்த பின் இருவரும் முதல்முறையாக சந்திக்க உள்ள நிலையில் இதில் தேர்தல் பிரசார வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon