--- --:--:-- --

வீடியோவில் சிக்கிய ராட்சத பறவை..! ஆச்சர்யத்தில் மக்கள்..!

11

கொலம்பியா நாட்டில் விகார தோற்றம் கொண்ட அரிய வகை பறவை ஒன்று தென்பட்டது. அந்தப் பறவையின் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் பரவி காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

கேம் ஆப் த்ரோன்ஸ் பல ஹாலிவுட் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் வரும் வினோத தோற்றம் கொண்ட உயிரினங்கள் தான். வானில் பறக்கும் பறவை ஹாலிவுட் படங்களில் அழகாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவருகின்றன.

 

சில சமயங்களில் அது போன்ற வித்தியாசமான உயிரினங்கள் நிஜ வாழ்க்கையிலும் மனிதர்களின் கண்களில் ஆங்காங்கே தென்படுகிறது. இந்த பகுதியில் கொலம்பியா நாட்டின் பகுதியில் உள்ள சிம்பொலோ நகரை சேர்ந்த பெண்மணி தோட்டமொன்றில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

 

அந்த தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே சென்றபோது அவருக்கு விசித்திரமாக ஏதோ தென்பட்டது. முதலில் அதனை மரக்கட்டை என்று அந்தப் பெண்மணி நினைத்துள்ளார். பின்னர் அருகில் சென்று பார்த்தபோதுதான் அது ஒரு பெரிய பறவை என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. அதனை தனது செல்போனில் படம் எடுக்கத் தொடங்கினார்.

 

அந்த பெண்னை கண்டதும் அந்த பறவை அதன் கண்களை விரித்து கொண்டு வாயை அகலத்திறந்து கத்த தொடங்கியுள்ளது. பறவையின் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் அந்தப் பெண்மணி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon