சர்வதேச அளவில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிப்பு..!
சர்வதேச அளவில் இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டியான் மாண்டான் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இந்த ஆய்வில் உலகளவில் 16 லட்சம் இரட்டை குழந்தைகள் பிறப்பது தெரியவந்துள்ளது.
1980களில் ஆயிரம் பிரசவத்திற்கு 9 இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் 30 ஆண்டுகளில் ஆயிரம் பிரசவத்திற்கு 12 ஆக இந்த விகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக வட அமெரிக்காவில் 71 சதவீதமும் ஆசியாவில் 32 சதவீதமும் இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்துள்ள நிலையில் ஐவிஎஃப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறை காரணமாகவே இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





