--- --:--:-- --

திமுக கூட்டணியில் திருப்பூர் வடக்கில் இ.கம்யூனிஸ்ட் போட்டி!

Ind Communist

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் 6 தொகுதிகள் விவரம் வெளியாகி இருக்கிறது. திருப்பூர் வடக்கு தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

திமுக கூட்டணியில், தி.மு.க.- 174, காங்கிரஸ்- 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி- 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 6, ம.தி.மு.க.- 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி- 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 3, மனிதநேய மக்கள் கட்சி- 2, தமிழக வாழ்வுரிமை கட்சி- 1, மக்கள் விடுதலை கட்சி- 1,
ஆதித் தமிழர் பேரவை- 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையிலான குழு, இன்று காலை பேச்சு நடத்தியது. அதன் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

 

அதன்படி, திருப்பூர் வடக்கு, வால்பாறை (தனி), பவானிசாகர் (தனி), சிவகங்கை, திருத்துறைப்பூண்டி (தனி), தளி ஆகிய தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

 

அதேபோல், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon