சீட் தராததால் அதிருப்தி! பாமகவில் இருந்தும் முக்கியப் பிரமுகர் விலகல்!!
தமிழகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் அதிருப்தியடைந்துள்ள வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்தி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் தரப்பட்டுள்ளன. அதன்படி, செஞ்சி, மைலம், ஜெயம்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பொண்ணாகரம், தர்மபுரி, விருதாச்சலம், காஞ்சிபுரம், கீழ்பெண்ணாத்தூர், மேட்டூர், சேலம், சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேளூர், ஆத்தூர் (திண்டுக்கல்) ஆகிய 23 இடங்களில் பாமக போட்டியிட உள்ளது.
இதனிடையே பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியானது. அதை தொடர்ந்து, பாமக வேட்பாளர்கள் 10 பேர் அடங்கிய முதல்கட்ட பட்டியலும் வெளியானது. அதன்படி, பென்னாகரத்தில் ஜி.கே. மணி, திண்டுக்கல் ஆத்தூரில் திலகா பாமா, கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் கி. ஆறுமுகம், ஜெயங்கொண்டத்தில் கே. பாலு போட்டியிடுகின்றனர்.
ஆற்காடு தொகுதியில் கே.எல். இளங்கோவன், திருப்பத்தூரில் டி.கே. ராஜா, தருமபுரியில் எஸ்.பி வெங்கடேஸ்வரன், சேலம் மேற்கில் இரா. அருள், செஞ்சி தொகுதியில் எம்.பி.எஸ். ராஜேந்திரன் பாமக வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி நேற்று அறிவித்திருந்தார்.
இதில், ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளராக பாலு அறிவிக்கப்பட்டுள்ளது, வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயங்கொண்டம் தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்று, அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவருக்கு கிடைக்காததால் அதிருப்தி அடையந்த வன்னியர் சங்க பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில், வன்னியர் சங்கத்தின் மாநிலசெயலாளர் பொறுப்பில் இருந்தும், பாமகவில் இருந்தும் விலகுவதாகவும், உழைப்புக்கு மதிப்பு இல்லை. நடிப்புக்கு மட்டுமே மதிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பாமக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




