கேட்டது 9; தருவது 2 ஆ? அதிமுக மீது இன்னொரு கட்சி அதிருப்தி!
அதிமுக கூட்டணி மீது இன்னொரு கட்சியும் அதிருப்தியடைந்து, தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. 9 கேட்டால் 2 தருவதாக, அதிமுக தலைமை மீது புதிய நீதிக்கட்சி அதிருதியில் உள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதிமுக கூட்டணியில் இன்னமும் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவற்றுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி முதலில் 11 இடங்கள், பின்னர் 9 இடங்கள் வரை கேட்டதாக தெரிகிறது. ஆனால், அதிமுக தரப்பில் அதிகபட்சம் 2 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை புதிய நீதிக்கட்சி ஏற்கவில்லை.
அதிருப்தி அடைந்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், அக்கூட்டணியில் இிருந்து ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதாவது, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதிய நீதிக்கட்சி போட்டியிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து புதிய நீதிக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இருந்து வருகிறோம். இம்முறை தேர்தலில் புதிய நீதிக்கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை.அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று, அதன் நிறுவனர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




