--- --:--:-- --

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் முதல்வர் பழனிச்சாமி!

cm

சென்னையில் முதல்வர் பழனிச்சாமி, இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு, கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

 

இந்தியாவில், மார்ச் 1ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி திட்டம் பொதுமக்களுக்கென விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், 45 வயக்குக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயுள்ளவர்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

 

அவ்வகையில் கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். அண்மையில் துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

 

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon