--- --:--:-- --

’வலிமை’ அப்டேட் கொடுத்து திருப்பூர் கலெக்டர் அசத்தல்..! அடடே சொல்லும் ரசிகர்கள்!!

vijayakarthikeyan 01

நடிகர் அஜித்தின் ரசிகர்கள், வலிமை படத்தின் அப்டேட் தகவல்களை கண்ட இடங்களில் கேட்டு வரும் நிலையில், திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘வலிமை அப்டேட்’ கொடுத்து, நூதனமாக அசத்தி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ பட ஷூட்டிங், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலால் தாமதமாகி, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு, ஹைதராபாத்தில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. ஹைதராபாத் படப்பிடிப்பின்போது, அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அந்த படம் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

 

 

‘வலிமை’ படம் பூஜை போட்டதற்கு அது குறித்த எந்த தகவலும் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வரவில்லை. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் அப்டேட் கேட்டு ட்விட்டரில் அவ்வப்போது அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பான சில ரசிகர்கள் கொச்சையாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினார்கள்.

 

அத்துடன் நிற்காமல் வலிமை அப்டேட் கேட்டு கிரிக்கெட் மைதானத்தில் தொல்லை கொடுத்தது, தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிச்சாமியிடம் இதுபற்றி ரசிகர்கள் கேட்டது என்று, ஆர்வக்கோளாறில் அஜித் ரசிகர்கள் அலம்பரைச் செய்தனர். நிலமை கைமீறிப் போனதை அடுத்து, அஜித் அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. வலிமை பட அப்பேட் என்பதே ஒரு தலைப்பு செய்தியானது.

 

இந்த நிலையில், திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், #ValimaiUpdate என்ற பெயரில் ஒரு டிவிட் போட்டு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 

அதாவது, ‘ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது’ என்று பதிவிட்டு Here is the #Valimai Update மக்களே ! #ValimaiUpdate #TNElections2021 ஆகிய ஹேஷ்டாக்குகளை பதிவிட்டுள்ளார். ஜனநாயகத்தின் வலிமையே தேர்தலில் வாக்களிப்பது என்று அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.

 

திருப்பூர் கலெக்டரான்  மருத்துவ பட்டதாரியான டாக்டர் K. விஜய கார்த்திகேயன்,  ஆட்சியர் என்பதை தாண்டி பல முகங்களை கொண்டவர். எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர், விளையாட்டு பிரியர்.

 

எல்லாவற்றுக்கும் மேல்  துடிப்பானவர், வேகமாக செயல்பட்டு சாமானிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் போய்ச் சேருவதில் ஆர்வம் காட்டுபவர்.  களத்திலும் சரி, சமூக வலைதளத்திலும் சரி ஆக்டிவாக இருப்பவர்.

 

அந்த வகையில், சமகாலத்தில் டிரெண்டிங்காக உள்ள ஒரு தலைப்பை எடுத்து, நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வை திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஏற்படுத்தி இருப்பது, பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

 

கலெக்டரின் இந்த புதுமையான பிரசாரத்தை, அஜித் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon