--- --:--:-- --

ம. நீ.ம. கட்சியின் 70 வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார் கமல்!

MMK 01

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 70 கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி பொன்ராஜ் அண்ணாநகரிலும், சினேகன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டார்.

 

அந்த பட்டியலில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எதுவும் இடம் பெறவில்லை. இதில் சினேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பணியாற்றிய பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

 

மக்கள் நீதிமய்யம் கட்சியின் முக்கியமான ேட்பாளர்கள் பெயரும், போட்டியிடும் தொகுதிகளும் வருமாறு:

 

பொன்ராஜ் – அண்ணாநகர்

சிநேகன் – விருகம்பாக்கம்

சிநேகா மோகன்தாஸ் – சைதாப்பேட்டை

செந்தில் ஆறுமுகம் – பல்லாவரம்

பத்மபிரியா – மதுரவாயல்

ரமேஷ் கொண்டலசாமி – மாதவரம்

சந்தோஷ்பாபு – வில்லிவாக்கம்,

பிரியதர்ஷினி – எழும்பூர்

சிவ இளங்கோ – தாம்பரம்

பாசில் – ஆர்.கே.நகர்

பொன்னுசாமி – பெரம்பூர்

லாவண்யா – திருப்போரூர்

முருகானந்தம் – திருவெறும்பூர்

உமா தேவி – அருப்புக்கோட்டை

மேற்கண்ட வேட்பாளர்கள் உள்பட 70 பேரின் பட்டியலை மக்கள் நீதிமய்யம் கட்சி வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon