சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் திமுக கூட்டணி வைக்கப் போகிறதா..?
பரபரப்பான அரசியலுக்கு பெயர் போன இந்து மக்கள்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திமுக சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் கூட்டணி வைத்திருக்கிறது என்று புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
அதுமட்டுமில்லை, பெட்ரோல், டீசல் விலை ஏறுவதற்கு காரணம் ஸ்டாலின் தான் எனவும், எண்ணெய் நிறுவனங்களுக்கும், விலை உயர்ந்ததற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.






