--- --:--:-- --

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

4

மிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

எட்டாம் தேதி தென் தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon