--- --:--:-- --

வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக 25 கோழிக் குஞ்சுகள்..!

2

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்ட அதே நேரத்தில் வாக்காளர்களை கவர பலவித அணுகுமுறைகளை கட்சிகள் கடைபிடிக்கின்றன. வேட்டி, சேலை, பரிசு பணம் வரிசையில் இப்பொழுது கோழிக்குஞ்சும் சேர்ந்துவிட்டது.

 

குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம் அவர்களுக்கு தருவதாக எடுத்துச்செல்ல நான்காயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது முதலே விதவிதமான முறைகளில் பரிசு பொருட்களை வாகனங்களுடன் சேர்க்க கட்சியினர் முயன்று வருகிறார்கள்.

 

அப்படித்தான் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வேட்டி, சேலை, தட்டு ஆகியவற்றை சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்துள்ளனர். இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் குன்னூர் கோடை மழையில் வாகனம் ஒன்றில் இருந்து நான்காயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் பிடிபட்டுள்ளன.

 

இப்படி கூட வாக்காளர்களை கவர்வதற்காக தேர்தல் பறக்கும் படையினர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல்லில் இருந்துே கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

 

அவர்களின் குடும்பத்திற்கு 25 இந்த கோழிக்குஞ்சுகள் வீதம் தர இருந்ததாக இவை கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் அரசின் இலவச நாட்டு கோழி குஞ்சு வழங்கும் திட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon