உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளிக்கு செல்லவில்லை..!
உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளிக்கு செல்லவில்லை என்று அறிவித்துள்ளது. தொற்று காரணமாக கடந்த ஆண்டு உலகின் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பல நாடுகள் கல்வி நிறுவனங்களை முழுமையாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து உள்ளது. அதில் 16.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கடந்த ஓராண்டாக பள்ளி செல்லவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முழு மற்றும் பாதி அளவு பள்ளிகள் மூடலால் 88 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 14 நாடுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை பெரும்பாலும் பள்ளிகள் மூடியுள்ளதால் 9.8 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கணித்துள்ளனர்.






