--- --:--:-- --

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்சல் முறையில் அன்னதானம்..!

6

லகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்சல் முறையில் அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரொனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிறுத்தப்பட்டிருந்தது.

 

மேலும் கடந்த சில மாதங்களாக கோவிலுக்கு வெளியே மட்டும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பக்தர்களுக்கு முறைப்படி மீண்டும் அன்னதானம் வழங்க திட்டமிட்ட கோயில் நிர்வாகம் பார்சல் முறையின் அன்னதானம் வழங்கும் முறையை தொடங்கியுள்ளது.

 

தினமும் மதியம் 12 மணியளவில் பார்சல் முறையில் தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவை உணவுகள் வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 200 பார்சல் பொட்டலங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon