--- --:--:-- --

அறிவியலின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்ய வேண்டாம்..!

6

றிவியலின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்ய வேண்டாம் என்று ஆழ்ந்த 100 சதவீத அர்ப்பணிப்பையும் வழங்குமாறு ஆராய்ச்சி மாணவர்களுக்கு புவனேஸ்வரி இயற்பியல் நிறுவனத்தின் தலைவர் எஸ்எம் யூசுஃப் அறிவுறுத்தியுள்ளார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இதில் புவனேஸ்வர் நிறுவனத்தின் தலைவர் யூசுப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

 

அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த குறுந்தகட்டை வெளியிட்டார். சிறந்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட விருதுகளை வழங்கி உரையாற்றியுள்ளார். அப்போது இந்தியாவுக்கு இன்னும் பல சி.வி.ராமன்கள் தேவை என குறிப்பிட்டுள்ளார். எஸ் ஆர் எம் ஐ எஸ் டி நிறுவனம் ஆராய்ச்சிகள் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

 

நிறுவனத்தலைவர் சத்யநாராயணன் பேசுகையில் தேசத்தை வடிவமைப்பதில் உயர் கல்வியும் ஆராய்ச்சியும் மிக முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார் எஸ்ஆர்எம் .பல்கலைக் கழக நிறுவனர் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அனுப்பியிருந்த செய்தி நெகிழ்ச்சியில் வாசிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon