--- --:--:-- --

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்..!

7

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் கடந்த அக்டோபர் எட்டாம் தேதி முதல் பள்ளிகளும் கல்லூரிகளும் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளன.

 

தற்போது பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து அரசு , தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முழுநேரமும் வழக்கம்போல செயல்படும் என கல்வித்துறை இயக்குனர் உத்தரவு அறிவித்துள்ளார்.

 

வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12 ஆம் வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும் என அறிவித்துள்ளார் . இதனிடையே 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தேர்தலுக்குப் பிறகும் தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon