ஆட்டோ வீடு செய்த இளைஞரை பாராட்டிய ஆனந்த் மகேந்திரா..!
வித்தியாசமான முயற்சியில் ஆட்டோவில் மாற்றங்களை செய்து புதிதாக வடிவமைத்த தமிழக கண்டுபிடிப்பாளர் அருண் பிரபுவை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா வியந்து பாராட்டியிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த அருண் பிரபு என்கிற இளைஞர் ஆட்டோவை வீடு போலவே வடிவமைத்துள்ளார். சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றோடு சூரிய மின்னுற்பத்தி சாதனம் அந்த ஆட்டோ வீட்டில் இடம்பெற்றிருந்தது.
வீடு குறித்து முதல்முறையாக 2019ஆம் ஆண்டு செய்தி ஒளிபரப்பானது. இந்த நிலையில் மகேந்திரா டிராக்டர் நிறுவனத்தின் தலைவரான மகேந்திரா அருண் பிரபுவின் ஆட்டோ வீட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளார் .
அருள் பிரபுவின் கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்றும் கூறியுள்ளார். தங்களது நிறுவனத்தில் பொலிரோ பிக் அப் வாகனத்தை இவ்வாறு மாற்றி வடிவமைக்க அருண் பிரபு முன் வருவாரா என்று கேட்டுள்ளார்.






