--- --:--:-- --

ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணி..!

7

கோயம்புத்தூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பயணியை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஒருவர் மீட்கும் சிசிடிவி காட்சியை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

 

கைதரபாத் செல்லும் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

 

அப்போது வண்டியின் கம்பியை பிடித்துக் கொண்டிருந்து தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் துரிதமாக செயல்பட்டு அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon