தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கலாகிறது..!
தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். தமிழகம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 11ஆவது பட்ஜெட் .
தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது. 2020- 20 21 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் 4 கோடியே 56 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் கடன்சுமை 5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.






