சீமான், சரத்குமார் போன்றவர்கள் தங்களுடன் கூட்டணிக்கு வரலாம்..!
நடிகர் ரஜினிகாந்த் அவரது ஆதரவை அவராகவே தர வேண்டுமே தவிர அதனைக் கேட்டு பெற முடியாது என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு தாம்பரத்தில் மக்கள் நீதி மையம் பற்றிய நான்காவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன் தனது மொழி மற்றும் அடையாளத்தை அழிக்க நினைப்பவன் நல்லவராகவே இருக்க முடியாது என தெரிவித்தார்.
திமுக அதிமுக வில் இருக்கும் நல்லவர்கள் எல்லோரும் மக்கள் நீதி மையத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அழைப்பு மறைமுகமாக வந்தது எனக் கூறினார்.
கூட்டணிக்காக தூது அனுப்பியது எல்லாம் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த கமல்ஹாசன், சீமான், சரத்குமார் போன்றவர்கள் தங்களுடன் கூட்டணிக்கு வரலாம் எனவும் கூறியுள்ளார்.






