ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைப்பு..!
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணத்தை குறைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக போக்குவரத்துக்கழக துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பெருந்துறையில் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.
இந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெருந்தொற்று சிறப்பு மருத்துவமனையாக இயங்கி வருகிறது.
ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் ஈரோடு பேருந்துபெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அரசு கட்டணத்தை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இந்த மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட நிலையில் இனி 13 ஆயிரத்து 610 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






